Dasavatharam, a review in tamil - Costly entertainment
தசாவதாரம் - யானைப் பசிக்கு சர்வதேச சோளப்பொறி...
தசாவதாரம் பார்க்கக் கூடிய ஒரு பொழுதுபோக்குப் படம். கூடவே சில கமலின் சிந்தனை சிதறல்கள், சிந்தியும் சிதறாமலும்...
ஒரு வரியில் கதை சொல்வதென்றால், அமெரிக்காவில் கண்டுபிடிக்கப் படும் ஒரு உயிர்கொல்லி கிருமி ஆயுதம், திவிரவாதிகள் கையில் சிக்காதபடி, கமல் இந்தியா வரை வந்து காப்பாற்றுகிறார்.பிறகு எதற்கு பத்து கமல்கள்? சாதாரணமாய் ப்ரகாஷ்ராஜ், நாசர் செய்யும் கதாபாத்திரங்களை கமலே லாவிக் கொண்டதுடன், கொஞ்சம் மானே, தேனே எல்லாம் போட்டுக் கொண்டதால், பத்து கமல் அரிதாரங்கள், ஒட்டியும் ஒட்டாமல் - நம் மனதிலும், அவர் முகத்திலும்...

[image: http://www.dasavathaaram.com/]
சரி. கதைக்குத் தேவையான கதாப்பாத்திரங்கள் – Scientist, Assassin, தெலுங்கு கமல். அவ்வளவே. மற்றவை, கமலுக்குத் தேவையானவை... Costly செலவினங்கள். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இந்த மூன்று பாத்திரங்களில் கூட கமல் மூன்றிலும் தேவைப் படவில்லை.(No Long lost mother, father, brother, sister, grandmother etc relationships!).
படம் பல கமல்களை அள்ளித் தெளித்த வண்ணம் வேகமாக செல்கிறது. திரைக்கதைக்கு வேகம் பலம், பல கமல்கள் பலவீனம். இசை, பலமுறைக் கேட்டதால், நன்றாகவே உள்ளது. பின்னனி இசை பலம். Camera திரைக்கதையுடன் வேகமாக பயணிக்கிறது. Graphics பெரும்பாலும் அமெச்சூர்தனமாகவே உள்ளது. ஆனாலும் இது ஒரு நல்ல தொடக்கம். முதல் அடி சிகரத்தை நோக்கி. மேக்கப் முகமூடிகள் உள்ளிருக்கும் கமலை மறைக்க திணறுகின்றன. அரிதாரம் இன்னும் இந்தியன் தாத்தா கால்த்திலேயே இருக்கின்றது. சிவாஜியின் "ஒரு கூடை சன்லைட்" பாடலில் உள்ள நேர்த்திக் கூட George புஷ், Assassin, பாட்டி, பூவராகன், கலீப் உல்லா, ஜப்பானிய கதாப்பாத்திரங்களின் மேக்கப்பில் இல்லை...
வசனங்களில் Crazy மோகனின் வாடை - சிரிப்பு வரும் இடங்களில். வேறு சில இடங்களில், கமலின் அறிவுப் பறை சாற்றல். (எ.க்.: You are the south end of a north facing horse, One sperm in 4 million finds its way to make one a human and hence a உலக நாயகன்!, அழகிய சிங்கர் - மடோன்னா!)
பத்து வேடங்களில் தெலுங்கு கமல், பூவராகன் கமல் மனதைத் தொடுகிறார்கள். Assassin, கோவிந்த்தும் பரவாயில்லை. மற்றவர்கள், மாறுவேடப் போட்டியில் வந்து செல்கிறார்கள்.
பன்னிரெண்டாம் நூற்றாண்டும், சம்பவங்களும் நன்றாக படமாக்கப் பட்டு இருந்தாலும், பின் வரும் கதைக்கு ஒட்டுதல் நூலளவு. பிரம்மாண்டம் பிரமாதம் (தெலுங்கில்). அசின் சிரிக்கவும் வைக்கிறார், வள வளக்கவும் செய்கிறார். மல்லிக்கா ஷெராவத், இன்னும் சில லகரங்களை தனது ஆடை போல குறைத்தால், அவருக்கு நமீதா போஸ்ட்டும், நமீதாவுக்கு மும்தாஜ் போஸ்ட்டும் கிடைக்க வாய்ப்பு பலமாக இருக்கிறது. நாகேஷ், கே ஆர் விஜயா, ரேகா, ஜெயப்பிரதா, P வாசு எல்லோரும் வந்தார்கள் சென்றார்கள்.
எதுக்காக இத்தனைக் காலம், செலவு செய்து இந்த சோதா கதையை எடுக்க வேண்டும்? விறுவிறுப்பாக இருக்கிறது. ஆனால், ஒரு "மைக்கேல், மதன, காமராஜன்" அல்லது ஒரு "தெனாலி" கொடுத்த Entertainment Value இப்படத்தில் இல்லை. செலவுக்கு ஏற்ற வரவு - சந்தேகமே.. கமலுக்கு உடனடித் தேவை - கடிவாளம். கில்லி எடுக்க 'தரணி'களும், கே எஸ் ரவிக்குமார்களும் எப்போழுதும் உண்டு. ஒரு கே எஸ் ரவிக்குமாருடன் சேர்ந்த கமல், சில சிந்தனை சிதறல்களையும், பிதற்றல்களையும், சுய அரிதார ஆசைகளையும் நிறைவேற்ற இத்தனைக் கோடிகளை கரைத்து இருக்க வேண்டாம். இன்னும் கொஞ்சம் ஆழமான, பொழுது போக்கு படம் எடுத்திருக்கலாம்.

பொழுது போக்கு, கண்டிப்பாய் இருக்கிறது. ஆனால், இதுக்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமா?
Labels: Dasavatharam, Kamal, Review, Self indulgence, Tamil
4 Comments:
very nice review.
didn't watch the movie. I don't even intend to.
By Anonymous, at June 16, 2008 9:41 AM
Thanks for visiting :)
By Bart, at July 24, 2008 4:11 AM
Hello there,
It would have been really helpful for some if you had written this blog in English.
By Elfy, at July 29, 2008 6:58 AM
Hi, thanks for visiting. Will stick to english in this blog hereon :)
By Bart, at August 02, 2008 8:23 PM
Post a Comment
<< Home