Slices of south - South of Nowhere

Tuesday, November 22, 2005

My dear friend, Manju...

என் இனிய நண்பா மஞ்ஜு நாதா...

உன்,

வெள்ளை சிரிப்பும், பிள்ளை பேச்சும்,
வெங்கல குரலும், தங்க குணமும்,
தோல்வி கண்டும் துவளா உள்ளமும்,
தோரணமாய் தொங்கும் நினைவுகள் என்றும்...
என்,
கண்கள் பனிக்கும், நெஞ்சம் நனையும்,
எப்பொழுது உன்னை நினைத்தாலும்...

காசு மட்டும் கிடைத்தால் போதாது,
மாசு, செய்யும் வேலையில் இருக்க கூடாது என நினைத்தாய்...
அய்யோ, இது பூலோகத்திற்கு ஒவ்வா செயலென
புது மேலோகதிற்கு அழைத்து கொண்டாள் படைத்த தெய்வத் தாய்!

என்ன பிதற்றி என்ன பயன்?!...
உன் உதட்டு சிரிப்பும், அதில் தொங்கும் உற்சாகமும்,
வருடும் குரலும்... படரும்
இன்னும்... இன்னும்...

இது மழைக்காலம். இல்லை, நீதியின் அழுகை!
கலப்படம், பெட்ரோலில் முடியும்..
எங்கள் கண்ணீர் துளிகளில் முடியாது.
இனி, நம்முள் கண்ணீர் தொடர்பு தொடரும்...

என்றும்... என்றென்றும்...

0 Comments:

Post a Comment

<< Home